2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பராஒலிம்பிக் 2016: தங்கங்களைக் குவிக்கிறது சீனா

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், 5ஆவது நாளான திங்கட்கிழமைமுடிவில், பதக்கப் பட்டியலில், சீனாவே முதலிடத்தில் காணப்படுகிறது.

26 தங்கப் பதக்கங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த சீனா, 13 தங்கங்களை மேலதிகமாகப் பெற்று, 39 தங்கங்கள், 30 வெள்ளிகள், 23 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது.

8 தங்கங்களை வென்ற பெரிய பிரித்தானியா, மொத்தமாக 23 தங்கங்கள், 14 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் 18 தங்கங்கள், 13 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உக்ரைனும் காணப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்கா (13), பிரேஸில் (6), உஸ்பெகிஸ்தான் (6), அவுஸ்திரேலியா (5), நெதர்லாந்து (5), ஜேர்மனி (4), துனிஷியா (4) ஆகியன, தொடர்ந்துவரும் இடங்களில் காணப்படுகின்றன.

இப்போட்டிகள், 18ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .