Shanmugan Murugavel / 2016 நவம்பர் 14 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக, தான் நியமிக்கப்படுவாரா என்பதை, ஒரு மாதகாலத்துக்குள் அறிவிக்க வேண்டுமென, அவ்வணியின் இடைக்கால முகாமையாளரான கரித் சௌத்கேட் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரின் இடைக்கால முகாமைத்துவத்தின் கீழ், இங்கிலாந்து அணி பங்குபற்றும் கடைசிப் போட்டியாக, ஸ்பெய்ன் அணிக்கெதிராக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள சிநேகபூர்வ போட்டி அமையவுள்ளது. இந்நிலையிலேயே, ஒரு மாதத்துக்குள் தனது எதிர்காலம் தொடர்பான முடிவை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சாம் அலர்டைஸ், முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அப்பதவிக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, சௌத்கேட் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026