Shanmugan Murugavel / 2016 நவம்பர் 16 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டமொன்றின் கீழ், வீரரொருவர், நடுவரின் தீர்ப்பைமறுபரிசீலனை செய்யாவிட்டாலும், தலையிட்டு, பிழையான தீர்ப்புகளை மாற்றுவதற்குரிய அதிக அதிகாரம், மூன்றாவது நடுவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று, இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் தென்டுல்கர் கூறியுள்ளார்.
சரியான தீர்ப்புகள், தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் யோசனை என்று தெரிவித்த சச்சின், அந்த இலக்கினை நோக்கி, மூன்று நடுவர்களும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இதுதவிர, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை சோதிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முடிவை, நேர்மறையானது எனக் கூறிய சச்சின், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026