2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ராம் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியது டைட்டான்ஸ்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபது-20 போட்டித் தொடரான ராம் ஸ்லாம் இருபது-20 சலஞ்சினை டைட்டான்ஸ் அணி கைப்பற்றியது. செஞ்சூரியன் சுப்பர்ஸ்போர்ட் பார்க்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் டொல்பின்ஸ் அணியினைத் தோற்கடித்தே அவ்வணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டொல்பின்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, டுவைன் பிராவோ 30 பந்துகளில் 5, நான்கு ஓட்டங்கள், 3, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 53 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டைட்டான்ஸ் அணி சார்பாக டேவிட் வைஸ் 2, ஜூனியர் டலா, ஹென்றி டேவிட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டைட்டான்ஸ் அணியானது 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மங்கலிசோ மொஷிலி 39 பந்துகளில், 6, நான்கு ஓட்டங்கள், 7, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 87 ஓட்டங்களையும் ஹென்றி டேவிட்ஸ் 35 ஓட்டத்தினையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டொல்பின்ஸ் அணி சார்பாக கைல் அபோட் 2 விக்கெட்டுகளையும் அன்டிலே பெகுலுவாயோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக டைட்டான்ஸ் அணியின் மங்கலிசோ மொஷிலியும் சிறந்த பந்துவீச்சாளராக ஹென்றி டேவிட்ஸும் தெரிவாகினர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .