2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரஷ்யா கிரான்ட்பீரிக்ஸில் ஹமில்டன் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மேர்சிடஸ் அணியின் சக வீரர் நிக்கோ ரோஸ்பேர்க் பந்தயத்தில் ஆரம்பத்திலேயே விலகியதையடுத்து ரஷ்ய போர்மியுலா வன் கிரான்ட்பீரிக்ஸ் பட்டத்தை கைப்பற்றிய பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன், தனது மூன்றாவது உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளார்.

இது ஹமில்டன் இந்தப் பருவகாலத்தில் பெறும் ஒன்பதாவது வெற்றி என்பதுடன், அவர் தனது வாழ்நாள் காலத்தில் பெறும் 42 வது வெற்றியாகும்.

இரண்டாமிடத்தை பெராரி அணியின் செபஸ்ட்டியான் வெட்டல் பெற்று, தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருந்த நிக்கோ ரோஸ்பேர்க்கை பின்தங்கியுள்ளார். இன்னும் நான்கு பந்தயங்களும், 100 புள்ளிகளுமே எஞ்சியிருக்கையில் வெட்டலுக்கும் ஹமில்டனுக்குமிடையே 66 புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகின்றது.

இந்த பந்தயத்தின் இறுதி சுற்றில் மூன்றாமிடத்தை பெறுவதற்காக வல்ட்டேரி போட்டாசும், கிம் ரைக்கொனும் மோதிக்கொண்டதில், மூன்றாமிடத்தை போர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த மெக்சிக்கோவின் செர்ஜியோ பெரேஸ் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .