2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

றியோ ஒலிம்பிக்: 4ஆவது தடவையாகவும் ஜப்பானிய வீராங்கனைக்குத் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பானிய மல்யுத்த வீராங்கனை காவோரி இச்சோ, தொடர்சியாக நான்கு ஒலிம்பிக் போட்டிகளில், தனிநபர் போட்டியொன்றில் தங்கம் வென்ற முதலாவது வீராங்கனையாக தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.

பெண்களுக்கான 58 கிலோகிராம் பிறீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் ரஷ்யாவின் வலேரியா கொப்லோவைத் தோற்கடித்தே காவோரி இச்சோ மேற்கூறப்பட்ட சாதனையைத் நிகழ்த்தியிருந்தார்.

32 வயதான காவோரி இச்சோ, போட்டி முடிவடைய ஐந்து செக்கன்கள் இருக்கையிலும் பின்தங்கியிருந்த போதும் அதிரடியாக வெற்றி பெற்று சாதனை புரிந்திருந்தார்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ், 2008ஆம் ஆண்டு பீஜிங், 2012ஆம் ஆண்டு இலண்டன், தற்போது 2016 றியோ என நான்கு ஒலிம்பிக்கிலும் காவோரி இச்சோ தங்கப்  பதக்கம் வென்றுள்ளார்.

பத்து தடவைகள் உலக சம்பியனான காவோரி இச்சோ, 2003ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டு ஜனவரி வரை 13 வருடங்களாக தோற்கடிக்கப்பட முடியாதவராக விளங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .