Gopikrishna Kanagalingam / 2017 மே 10 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராக, ஷஷாங் மனோர், அடுத்தாண்டு ஜூன் வரை நீடிப்பார் என, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபையின் முதலாவது சுயாதீன தவிசாளராகப் பதவியேற்ற ஷஷாங் மனோகர், இவ்வாண்டு மார்ச் மாதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அறிவித்தார். எனினும், புதிய யாப்புத் தொடர்பான முக்கியமான காலகட்டத்தில் சபை காணப்பட்டதன் காரணமாக, அதுவரை இடைக்கால ரீதியில் தொடர்ந்து பணியாற்றுமாறு, அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த மாநாடு வரை, பதவியில் இருப்பதாக அவர் அறிவித்தார்.
அவரின் தலைமையின் கீழ், முக்கிய மூன்று நாடுகளான இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன முக்கியத்துவம் பெறும் யாப்பும் மாற்றப்பட்டு, அதிகளவு ஜனநாயகம், நிலைநாட்டப்பட்டது.
இந்நிலையில், ஷஷாங் மனோகரிடம், சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்தவர்கள், மீண்டும் அழுத்தத்தை வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடியும் வரை - ஜூன் 20018 வரை - தனது பதவியில் நீடிப்பதற்கு, அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தவிசாளர் பதவி தொடர்பாக நிலவிய தடுமாற்றம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட் சபையில், மீள்சீரமைப்புகளை மேற்கொள்ளும் பணி, மேலும் இலகுவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago