Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வுபெறுவதற்கான சரியான தருணம் இதுவே என அவர் அறிவித்துள்ளார்.
உபாதைகளால் தடுமாறிவந்த ஷேன் வொட்சன், அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதிலும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தார். இதன் காரணமாக, ஆஷஸ் தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே விளையாட வாய்ப்புக் கிடைத்திருந்தது.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான போராட்டக் குணம் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்துள்ள வொட்சன், டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான உடல், உள, நுட்ப அளவை எண்ணும் போது, ஓய்வுபெறுவதற்கு இதுவே சரியான தருணமெனத் தெரிவித்துள்ளார்.
59 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய வொட்சன், 4 சதங்கள், 24 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 35.19 என்ற சராசரியில் 3,731 ஓட்டங்களையும், 3 ஐந்து விக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 33.68 என்ற சராசரியில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago