2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

1,000ஆவது வெற்றியைப் பெற்ற நடால்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க சுற்றுப்பயண போட்டிகளில் 1,000ஆவது வெற்றியை உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் பெற்றுக் கொண்டார்.

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சக ஸ்பானியரான பெலிசியானோ லொபெஸை 4-6, 7-6 (7-6), 6-4 என்ற செட் கணக்கில் நேற்று வென்றதன் மூலமே தனது 1,000ஆவது வெற்றியை ஸ்பெய்னின் நடால் பதிவுசெய்துகொண்டார்.

ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்மி கோனர்ஸ் 1,274 வெற்றிகளுடன் முதலாமிடத்திலும், சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் 1,242 வெற்றிகளுடன் இரண்டாமிடத்திலும், செக் குடியரசின் இவான் லென்டிஸ் 1,068 வெற்றிகளுடன் மூன்றாமிடத்திலும் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டோரில் நடாலுக்கு முன்னாலுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .