2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான இளையவர் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பசிந்து இசிர 50 ஓட்டங்களையும், வனிது ஹர்சனஹே டி சில்வா 43 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சாம் க்ரிம்வடே 3 விக்கெட்களையும், ஜொண்டி பட்டிசன், கிளின்ட் ஹிஞ்ச்லிப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.   
 
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. கிளின்ட் ஹிஞ்ச்லிப் 64 ஓட்டங்களையும், லியாம் பந்த்ரோப் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தமித் சில்வா 4 விக்கெட்களையும், சாமிக கருனாரட்ன, ரவிந்து திலகரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
6 போட்டிகள் அடங்கிய தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .