2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி; அவுஸ்திரேலியா வெளியேறும் அபாய நிலையில்

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் நடைபெற்ற உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியா அணியை  6 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளைப் பெற்று குழு 2 இல் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் அரை இறுதி வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிலன் மக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும், பிரட் ஹொஜ் 35 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சாமுவேல் பத்ரி, மார்லன் சாமுவேல், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுபாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் க்றிஸ் கெயில் 53 ஓட்டங்களையும், டரின் சமி ஆட்டமிழக்காமல்  34 ஓட்டங்களையும், டுவைன் பிராவோ ஆட்டமிழக்காமல்  27 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 19 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்று போட்டியினை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாயகனாக டரின் சமி தெரிவு செய்யபட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .