2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸ் பதவியில் இருந்து விலக டோனி அனுமதி?

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்தும், இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்தும் டோனி விலகுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்த ஊடகம், யார் அந்த அறிவித்தலை வழங்கியது என்ற செய்திகளை வெளியிடவில்லை. இருப்பினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையைக் கொண்டுள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தான் டோனியுடன் இது தொடர்பாக இன்னமும் பேசவில்லை என கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஊடகங்களின் அறிக்கைகளின் படி டோனி சூதாட்ட பிரச்சினைகளில் தன் பெயர் எடுக்கப்பட்டதில் கோவமாக இருப்பதாகவும், அணித் தலைவர் பொறுப்பில் இருந்தும், இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் உலக 20-20 நிறைவடையும் வரை தான் சூதாட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க மாட்டேன் என டோனி கூறியுள்ள அதேவேளை இந்திய கிரிக்கெட் அணியின் ஊடக முகாமையாளர் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொள்வார் என தெரிவிதுதுள்ளார்.

டோனி தொடர்பாக கூறப்பட்ட சூதாட்ட சர்ச்சைகள் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை எனவும் நீதிமன்றம் தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .