A.P.Mathan / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 தொடர் நிறைவடைந்து இலங்கை திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரிகள், தமது ஓய்வு அறிவித்தல் தொடர்பில் நடந்து கொண்ட விதம் தங்களுக்கு அதிருப்தி அளித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு ஊடங்களும் காரணம் என கூறிய குமார் சங்ககார எனக்கு இப்போது வயது 37. இனி ஓர் உலக 20-20 தொடரில் விளையாட முடியாது. இதை தான் நான் அறிவித்தேன் என கூறினார். இந்த விடயங்கள் தொடர்பாக எம்முடன் பேசாமல், கலந்துரையாடாமல் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டமை அதிருப்தியையும் கவலையையும் அளிக்கிறது என மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார். எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் பழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சங்ககார தெரிவித்தார். 5 hours ago
25 Apr 2026
உமேஷ் ஸ்ரீனிவாசன் Monday, 14 April 2014 08:47 AM
இளைஞர்களுக்கு வழி விட்டு உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெறுவது இருவருக்கும் பெருமை சேர்க்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026