2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைதராபாத் சன் ரைசஸ் அணி டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதன் மூலம் முதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன் ரைசஸ் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து  184 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழக்காமல் 88(53 பந்துகள், 4 ஓட்டங்கள் 8, 6 ஓட்டங்கள் 4) ஓட்டங்களையும், டேவிட் வோர்னர்  ஆட்டமிழக்காமல் 88(53 பந்துகள், 4 ஓட்டங்கள் 8, 6 ஓட்டங்கள் 4) ஓட்டங்களையும், ஷிகார் தவான் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முரளி விஜய்  52 (53 பந்துகள், 4 ஓட்டங்கள் 8, 6 ஓட்டங்கள் 4) ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 48 ஓட்டங்களையும், மனோஜ் திவாரி ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டைன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக ஆரோன் பிஞ்ச் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .