2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

டெல்லிக்கு வெற்றி - தொடர்கிறது மும்பாயின் தோல்வி

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி டெயார் டெவில்ஸ், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 6 விக்கெட்களினால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெரோன் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 33(30 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும், சிதம்பரம் கௌதம் 22(18 பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 18.5 ஓவர்களில் 126 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முரளி விஜய் 40(34 பந்துகள், 4 ஓட்டங்கள் 4, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், கெவின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 26(18 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 4 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியின் நாயகனாக முரளி விஜய் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .