2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பீகார் கிரிக்கெட் சம்மேளனம் ஸ்ரீநிவாசன் தொடர்பாக கேள்வி

A.P.Mathan   / 2014 மே 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னால்  தலைவர் தொடர்ந்தும் சர்வதேசக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில், இந்திய பிரதிநிதியாக செயற்படுவது தொடர்பாக பீகார் கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஆதித்திய வர்மா சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னஞ்சல் மூலமாக சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை இவர் அனுப்பி வைத்துள்ளார். இதில் கோவமான ஆட்சேபனையை தெரிவித்துள்ள அவர் "நீதிமன்றத்தினால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கூட்டத்திலும், அதன் செயற்பாடுகளிலும் ஈடுபட அனுமதியளிக்க முடியும்? ஏன் சர்வதேசக் கிரிக்கெட் சபை இந்த விடயத்தில் மௌனமாக உள்ளது” எனவும் கேட்டுள்ளார்.

கிரிக்கெட் என்பது மிகச் சிறந்த விளையாட்டு. கிரிக்கெட்டையும், வீரர்களையும் சரியாக வழிநடத்துவது சர்வதேசக் கிரிக்கெட் சபையினதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினதும் கடமை எனவும் பீகார் கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஆதித்திய வர்மா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் ஊழல் தொடர்பாக பீகார் கிரிக்கெட் சம்மேளனம் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலே இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இந்திய உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதேவேளை கடந்த வாரம் பீகார் கிரிக்கெட் சம்மேளனம் ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவியேற்பதை தடுக்குமாறு கோரியிருந்த போதும் நீதிமன்றம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .