2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஹட்ரிக் பந்துவீச்சு மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி

A.P.Mathan   / 2014 மே 06 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை  இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கருண் நைர் 35 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 44 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 37 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வினைக்குமார், சுனில் நரையன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ரொபின் உத்தப்பா 52 பந்துகளில், 5 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், கெளதம் கம்பீர்  34 பந்துகளில், 6 நான்கு ஓட்டங்கள், ஓர் ஆறு ஓட்டம் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதும் பிரவின் தம்பேயின் ஹட்ரிக் விக்கெட்களும், ஷேன் வொட்சனின் சிறந்த பந்துவீச்சும் போட்டியின் போக்கை ராஜஸ்தான் ரோயல்ஸ் பக்கமா மாற்றியது. பிரவின் தம்பே, ஷேன் வொட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக பிரவின் தம்பே தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன்  மூன்றாவதிடத்தில் உள்ளது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாமிடதிலும் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .