2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மன் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கிடையில் கடும் போட்டி

A.P.Mathan   / 2014 மே 06 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிரீமியர் லீக் காற்பந்தாட்ட தொடரின் 2014ஆம் ஆண்டிற்கான வெற்றி வாய்ப்புகளை மன்செஸ்டர் சிட்டி அணி நேற்றைய வெற்றியின் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளது. மன்செஸ்டர் சிட்டி, செல்சி, லிவர் பூல் ஆகிய அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்தப் பருவகாலம் நிறைவடைய செல்சி அணிக்கு ஒரு போட்டியும், லிவர் பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இரண்டு போட்டிகளும் மீதமுள்ள நிலையில் செல்சி அணி 78 புள்ளிகளையும், மன்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் தலா 80 புள்ளிகளையும் பெற்றுள்ளன. கோல் விதிதியாசத்தின் அடிப்படையில் மன்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அணி 3 இற்கு 2 என்ற கோல் கணக்கில் எவேர்ட்டன் அணியை வெற்றி பெற்று முதலிடத்தைக் கைப்பற்றியது. செல்சி அணி தனது சொந்த மைதானத்தில் நோர்விச் சிட்டி அணியுடன் கோல்கள் அற்ற சமநிலை முடிவைப் பெற்றதன் மூலம் முதலிட வாய்ப்புகளை இழந்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டி, லிவர் பூல் அணிகள் தோல்வியை சந்தித்து செல்சி அணி மீதமுள்ள போட்டியை வெற்றி பெற்றால் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நிலையில் புள்ளிகளில் சமநிலையில் உள்ள மன்செஸ்டர் சிட்டி,லிவர் பூல் அணிகள் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள போராடும் நிலை உள்ளது. லிவர் பூல் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 9 இறக்கும் அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றாலே முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

இந்த வாரத்தின் வார நாட்களில் மன்செஸ்டர் சிட்டி, லிவர் பூல் அணிகள் தங்களது 37ஆவது போட்டியில் விளையாடவுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த பருவகாலத்தின், அணிகளுக்கான இறுதிப் போட்டிகள்  அனைத்தும் ஒரே நேரத்தில் ஆரம்பாமாகி, ஒரே நேரத்தில் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வார முடிவுகள்

புள்ளிப்பட்டியல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .