2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

முஸ்டாக் அஹமட் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் முஸ்டாக் அஹமட் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பீற்றர் மூர்ஸ் இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் நீக்கப்படும் மூன்றாவது பயிற்றுவிப்பாளர் முஸ்டாக் அஹமட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்க்கனவே துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரகாம் கூச், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ரிச்சட் ஹல்சால் ஆகியோர் தங்கள் பதவிகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்டாக் அஹமட் இங்கிலாந்து அணியுடன் 2008ஆம் ஆண்டு பீற்றர் மூர்ஸ் பயிற்றுவிப்பாளராக இருந்த வேளையில் இங்கிலாந்து அணியுடன் இணைந்து இருந்தார். இதேவேளை இவர்கள் இருவரும் 2003 ஆண்டு சசெக்ஸ் பிராந்திய அணியுடன் இணைந்து அவர்களை சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற வைத்து இருந்தனர். இருப்பினும் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர்கள் பதவிகளில் அதிகமானவர்களை பீற்றர் மூர்ஸ் வைத்திருக்க விரும்பாமையின் காரணமாகவே விசேட பயிற்றுவிப்பாளர்கள் பதவிகளில் இருந்து விலகப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முஸ்டாக் அஹமட் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவிக்கு முஸ்டாக் அஹமட் விண்ணப்பித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கும் அதே பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்பது முஸ்டாக் அஹமட்டிற்கு ஒரு போட்டியை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .