2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மன்செஸ்டர் சிட்டிக்கு வெற்றிக் கிண்ணம்

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டதொடரில் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் ஆகியுள்ளது. நேற்று வெஸ்ட் ஹாம் ஜுனைட்டட் அணியுடனான போட்டியில் 2 இற்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்க்கான முதலிடத்தை உறுதி செய்தது. மன்செஸ்டர் சிட்டி அணி விளையாடிய 38 போட்டிகளில் 27இல் வெற்றி பெற்று 6 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்த அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்த்திதுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்குள் மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் வரலாற்றில் நான்காவது தடவையாக மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இரண்டாமிடத்தைப் லிவர்ப்பூல் அணி பெற்றுக் கொண்டது. லிவர்ப்பூல் அணி நியூகாசில் ஜுனைட்டட் அணியை 2 இற்கு 1 என வெற்றி பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது. லிவர்ப்பூல் அணி  தாங்கள் விளையாடிய 38 போட்டிகளில் 26 வெற்றிகளைப் பெற்ற அதேவேளை, தலா 6 போட்டிகளில் சமநிலை முடிவையும் தோல்வியையும் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் 2 புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம். இரு அணிகளுக்குமிடையில் கடும் போட்டி ஒன்று நிலவி வந்தது.

மூன்றாமிடத்தைப் செல்சி அணி பெற்றுக் கொண்டது. செல்சி அணி 25 வெற்றிகளையும், 7 சமநிலை முடிவைகளையும், 6 தோல்விகளையும் சந்தித்து 82 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. 79 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி நான்கமிடத்தையும், எவேர்டன் அணி 72 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. ஆறாமிடத்தை டொட்டேன்காம் அணி பெற்ற அதேவளை கடந்த முறை இங்கிலாந்து பிரீமியர் லீக் சம்பியனும், கூடுதலான தடவைகள்  இங்கிலாந்து பிரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்றவர்களும், இங்கிலாந்தின் பலமான கழகம் எனவும் வர்ணிக்கப்படும் மன்செஸ்டர் ஜுனைட்டட் கழகம் ஏழாமிடத்தைப் பெற்றுள்ளது. சௌதம்ப்டன், ஸ்டோக்சிட்டி, நியூகாசில் ஜுனைட்டட் அணிகள் முறையே எட்டாம், ஒன்பதாம், பத்தாமிடங்களைப் பெற்றுள்ளன.

இந்த வார முடிவுகள்

புள்ளிப்பட்டியல்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .