2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்ஹ?

A.P.Mathan   / 2014 மே 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான சந்திக்க ஹத்துருசிங்ஹ உடன் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தமது அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பேரில் இலங்கை கிரிக்கெட் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து ஹத்துருசிங்ஹ நீக்கப்பட்டார். அதன் பின் தன் குடுமபத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறிய ஹத்துருசிங்ஹ தற்போது நியூ சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றி வருகின்றார். 
 
இந்திய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்னதாக பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்க முயற்சிக்கின்றோம். பல பயிற்றுவிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முடிவு எடுக்கவில்லை. சந்திக்க ஹத்துருசிங்ஹ சம்மதம் தெரிவித்துள்ள போதும் சம்மளம் மற்றும் இதர சலுகைகள் பற்றிய விடயங்கள் தொடர்பில் இறுதிக் கட்ட முடிவுகள் எதுவும் இன்னமும் எடுககப்டவில்லை என நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். 
 
இலங்கை அணி மற்றும் நியூ சவுத்வேல்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் சந்திக்க ஹத்துருசிங்ஹ நல்ல பெயரை சர்வதேச ரீதியில் பெற்றுள்ளார். உலகின் சிறந்த நுட்பம் மிக்க பயிற்றுவிப்பாளர் எனவும் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களிலும் பார்க்க இவர் சிறப்பானவர் எனவும் குமார் சங்ககார ஹத்துருசிங்ஹவிற்கு புகழாரம் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடைமயாற்ற விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்த ஹத்துருசிங்ஹ, இலங்கை கிரிக்கெட் தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை என கூறியிருந்தார். 
 
ஹத்துருசிங்ஹ, பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பாட்டல், இலங்கை பயிற்றுவிப்பாளர் ஒருவர் வெளிநாட்டு அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .