2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியா, இங்கிலாந்து போட்டி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்து த ஓவல் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. பல சர்ச்சைகளின் பின்னர் இந்த போட்டி நடைபெறவுள்ளது. கடுமையான விமரசனங்களுக்கு பின்னர் இந்திய அணி இந்தப் போட்டியில் விளையாடவுள்ளது. 
 
தொடரின் ஆரம்பித்தில் தங்கள் பக்கம் இருந்த வாய்ப்பை இங்கிலாந்துக்கு இந்தியா வழங்கி தங்கள் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து அணி 2 இற்கு 1 என்றரீதியில் தொடரில் முன்னிலையில் உள்ளது. எனவே குறைந்தது இந்தப் போட்டியை சமநிலையில் நிறைவு செய்து தொடரைக் கைப்பற்ற முயற்ச்சிப்பார்கள். இந்தியா மீது உள்ள அழுத்தம் அவர்களுக்கு இந்தப் போட்டியிலும் பின்னடைவுகளை உருவாக்க வாய்ப்புக்கள் உள்ளன. 
 
இங்கிலாந்து அணி மாற்றங்கள் இன்றி கடந்த போட்டியில் விளையாடிய அணியே விளையாடும் என நம்பப்படுகின்றது. மூக்கு உடைவு ஏற்பபட்டு இருந்த ஸ்டுவோர்ட் ப்ரோட் குணமடைந்துள்ளார். 
 
எனவே அவர் இந்தப் போட்டியில் விளையாடுவார். இந்தியா அணிக்கு இஷாந்த் ஷர்மா இணைக்கப்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் கடந்த இரு போட்டிகளிலும் உபாதை காரணமாக விளையாடவில்லை. இதுவும் இந்திய அணிக்கு பின்னடைவை வழங்கியது. இந்தப் போட்டிக்கு அவர் திரும்புவது இந்திய அணிக்கு பந்துவீச்சில் பலத்தை தரும். பங்கஜ் சிங் இந்தப் போட்டியில் நிச்சயம் தன் இடத்தை இழப்பார்.  ரவீந்தர் ஜடேஜாவின் இடமும் கேள்வியான நிலையில் உள்ளது.
 
இலங்கை நேரப்படி பிற்ப்பகல் 3.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .