2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சசித்திர சேனநாயக்கவிற்கு இலங்கையில் பந்துவீச அனுமதி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் பந்து வீச முடியாது என தடைசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சசித்திர சேனநாயக்க, இலங்கையில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. இதன் படி நவம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ள வர்த்தக நிறுவன  கிரிக்கெட் போட்டிகளில் சசித்திர சேனநாயக்க விளையாடவுள்ளார். 
 
பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிகின்றார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை, சோதனைகளின் பின் சசித்திர சேனநாயக்க பந்துவீச முடியாது என அண்மையில் தடைசெய்தது. இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா சென்று தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து நாடு திரும்பினார். சசித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சில் மிகப் பெரிய முன்னேற்றம் உள்ளது. அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட சிகிச்சைக்க மூலம் அவரின் பந்துவீசுக் கோணம் 15 பாகை கோணத்துக்குள் வந்துள்ளது. இனி அவர் பந்துவீச முடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .