2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சம்பியன் லீக்: கொல்கொத்தா முதலிடம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ், டொல்பின்ஸ் அணிகள் மோதின. கொல்கொத்தா அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையிலும், டொல்பின்ஸ் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையிலும் தங்கள் இறுதி குழு நிலைப் போட்டிகளில் மோதின. இந்தப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ரொபின் ஊத்தப்பா 85 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டி 76 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 153 ஓட்டங்களை இணைப்பாட்டமாக ஆட்டமிழக்காமல் பெற்றனர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய டொல்பின்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அன்டிலே பெகளுக்வாயோ 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சுனில் நரையன் 3 விக்கெட்களையும், யூசுப் பதான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் குழு Aஇல் முதலிடத்தைப் பெற்றுள்ளது. டொல்பின்ஸ் அணி சகல போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இறுதி இடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .