2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சம்பியன் லீக்குக்கு அணிகள் தெரிவு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிகள் சம்பியன் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. அரை இறுதிப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி, ஹோர்பார்ட் கியுரிகன்ஸ் அணியை வெற்றி பெற்ற அதேவேளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது கிங்ஸ் 11 பஞ்சாப் அணியை வென்றுள்ளது. 
 
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கும், ஹோர்பார்ட் கியுரிகன்ஸ்  அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹோர்பார்ட் கியுரிகன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சொய்ப் மலிக் 60 ஓட்டங்களையும், பென் டங் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. 
 
சென்னை சுப்பர் கிங்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் பிராவோ 67 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரவிந்தர் அவ்னா 4 விக்கெட்களையும், அக்ஸார் பட்டேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் மில்லர் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஆஷிஸ் நெஹ்ரா, மோகித் ஷர்மா, பவான் நேஜி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .