2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஒருநாள் போட்டி தரவரிசை : முதல் இடத்தை தக்கவைக்குமா இந்தியா?

George   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றினால்  சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை தனி அணியாக தக்கவைத்துகொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியும்.

தற்போது இந்தியாவும், தென்னாபிரிக்காவும் தலா 113 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்று, அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் செவ்வாய்க்கிழமை(07) தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தலா 114 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும்.

அப்போதும் சிறியளவு வித்தியாசத்தில் இந்தியா முதலிடத்தில் தொடரும். ஆனால் தொடரை இந்தியா இழக்குமாக இருந்தால் முதல் இடத்தை பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .