2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்தியாவின் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான அணியில் இடம்பெறும் வீரர்களில் இருந்து உபாதை காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடாத அதேவேளை, அஷ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சம்பியன் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் குலதீப் யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அமித் மிஸ்ராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த சஞ்சு சம்சன், ஸ்டுவோர்ட் பின்னி, தவல் குல்கர்னி, கர்ன் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 
 
டோனியின் தலைமையில் விராத் கோலி, சிகார் தவான், அஜிங்கையா ரெஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, அம்பாத்தி ராயுடு,அமித் மிஷ்ரா, புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி,மோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குலதீப் யாதவ் ஆகியோர் ஆணியில் இடம் பிடித்துள்ளனர். 
 
இரு அணிகளுக்குமான ஒரு நாள் 5 போட்டிகள் அடங்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .