2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இந்தியா, மே.இ.தீவுகள் தொடர் இன்று

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 07 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று இந்தியாவின் கொச்சியில் ஆரம்பிக்கவுள்ளது. 5 போட்டிகள் அடங்கிய தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. இன்று ஆரம்பிக்கும் இந்த தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது. தரப்படுத்தல்களில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணி தமது முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் 1 போட்டிக்கு மேல் தோற்காமல் தொடரைக் கைப்பற்றவேண்டும் என்ற நிலை உள்ளது. பலமான இந்தியா அணியை மேற்க்கின்திய தீவுகள் அணி அவர்களது முக்கிய வீரர்கள் இருவர் இல்லாமல் எதிர்கொள்ளவுள்ளது. க்றிஸ் கெயில், சுனில் நரையன் ஆகியோர் இல்லாமல் இந்தியா அணியை இந்தியாவில் எதிர்கொள்வது மிகப்பெரியளவில் பின்னடைவை வழங்கும். 
 
இரு அணிகளுக்கிடையிலும் இந்தியாவில் இந்தியாவில் 47 போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்தியா அணி 22 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 25 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2002ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா அணியை 4 இற்கு 3 என கைப்பற்றியது. அதன் பின்னர் இந்தியா அணியை இந்தியாவில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .