2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று 3 போட்டிகள் அடங்கிய தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஹமட் செஷாட் 61 ஓட்டங்களையும், சப்ராஸ் அஹமட் 65 ஓட்டங்களையும், பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 126 ஓட்டங்களை பெற்றனர். ஆசாட் சபிக் 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மிச்சல் ஜோன்சன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, 43.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிளன் மக்ஸ்வெல் 76 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 29 ஓட்டங்களையும் பெற்றனர். சுல்பிகார் பாபர் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .