2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இந்திய அணிக்கு அபார வெற்றி

A.P.Mathan   / 2014 நவம்பர் 02 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கட்டாக் மைதானத்தில் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 169 ஓட்டங்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது. 
 
5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரின் முதற்ப் போட்டி இந்தியா கட்டாக்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது இந்தியா அணியை துடுப்பாடுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப ஜோடி 231 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜின்கையா ரெஹானே 111 ஓட்டங்களையும், சிகார் தவான் 113 ஓட்டங்களையும் பெற்றனர். சுரேஷ் ரெய்னா 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 
 
பந்துவீச்சில் சுராஜ் ரந்தீவ் 10 ஓவர்களில் 78 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹேல ஜெயவர்தன 43 ஓட்டங்களையும், திசர பெரேரா 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 8 ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். 
 
உமேஷ் யாதவ், அக்ஸார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டனர். 
 
போட்டியின் நாயகனாக அஜின்கையா ரெஹானே தெரிவு செய்யப்பட்டார். 
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி தரப்படுத்தலில் 114 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .