2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

உலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா

A.P.Mathan   / 2014 நவம்பர் 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, இரண்டாவது முறையாக இரட்டைச் சதத்தினைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளதுடன், ஒருநாள் போட்டிகளில் தனியொருவரினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். 
 
முன்னதாக நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். 
 
ரோஹித் சர்மா 173 பந்துகளில் 33 நான்கு ஓட்டங்கள், 9 ஆறு ஓட்டங்களுடன் 264 ஓட்டங்களை எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். விராட்கோலி 66 ஓட்டங்கள், ரகானே 28 ஓட்டங்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதனை அடுத்து 405 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .