2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சைட் அஜ்மலின் பரிசோதனை தோல்வி

A.P.Mathan   / 2014 நவம்பர் 15 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல் உத்தியோகபற்றற்ற பரிசோதனையில் தோல்வியடைந்த்துள்ளார். சைட் அஜ்மல் இங்கிலாந்தில் உத்தியோகபூர்வ பரிசோதனை செய்வதற்கு முன்னர் குறித்த பரிசோதனையை, உயிரியல் இயந்திர தொழில்நுட்பத்தின் மூலம் சைட் அஜ்மல் பரிசோதனை செய்து கொண்டார். ஆனாலும் இந்த பரிசோதனை அவருக்கு தோல்வியை வழங்கியுள்ளது. இந்த அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து சைட் அஜ்மலை மேலும் ஒரு வார காலம் இங்கிலாந்தில் தங்கி அவருக்கு பயிற்சிகளை வழங்கிய சக்லைன் முஸ்டாகிடம் பயிற்ச்சிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது. 
 
குறித்த பரிசோதனையில் சர்வதேசக் கிரிக்கெட் சபைக்காக சோதனைகளை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர் மார்க் கிங் அவரின் குழுவினருடன் இணைந்து குறித்த சோதனைகளை மேற்கொண்டார். இந்த சோதனையில் 18 வீடியோ படப்பிடிப்பு கருவிகளை வைத்து குறித்த சோதனைகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சோதனையில் மீள பந்துவீச அஜ்மலால் முடியும் என அனைவரும் நம்பி இருந்த போதும். இந்த சோதனையில் அவர் தொல்வியடைந்துள்ளது அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உலகக்கிண்ணத்திற்கு அஜ்மலை தயார் செய்ய முயற்சித்து வருகின்றது. ஆனாலும் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .