2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சங்கா தவறவிட்ட சாதனை

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. 

ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார்.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாவது நாள் முடிவின் போது, ஃபொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு இன்னமும் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் சங்கா ஆட்டமிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 11,988 ஓட்டங்களை குவித்துள்ளார் குமார் சங்கக்கார.

  Comments - 0

  • ramlan Monday, 29 December 2014 06:07 AM

    so sad

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .