A.P.Mathan / 2015 ஜனவரி 20 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த சனத் ஜனசூரியவின் சாதனையை இன்றையதினம் குமார் சங்கக்கார முறியடித்தார்.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியின்போதே இச்சாதனையை நிலைநாட்டினார் சங்கக்கார.
445 போட்டிகளில் 433 இன்னிங்ஸ்களில் விளையாடிய சனத் ஜயசூரிய, 13,430 ஓட்டங்களை 32.36 என்ற சராசரியில் சனத் ஜயசூரிய பெற்றிருந்தார். இச்சாதனையை இன்றைய தினம் 76 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார முறியடித்தார்.
இன்று தனது 394ஆவது போட்டியில், 370ஆவது இன்னிங்ஸில் வியைாடிய சங்கக்கார, 40.63 என்ற சராசரியில் 13,490 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 20 சதங்கள், 92 அரைச்சதங்களுடன் விளையாடிவரும் குமார் சங்கக்கார, உலகளாவிய ரீதியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கள் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் 13,704 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறுவதற்கு இன்னமும் 215 ஓட்டங்கள் மாத்திரமே குமார் சங்கக்காரவுக்கு தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago