2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நியூஸிலாந்துக்கு வெற்றி

A.P.Mathan   / 2015 ஜனவரி 20 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகள் விளையாடும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தம்மிக பிரசாத்துக்குப் பதிலாக இலங்கை அணிக்குள் ரங்கண ஹேரத் உள்வாங்கப்பட்டிருக்கிறார். நியூசிலாந்து அணியிலும் மூன்ற முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நதன் மக்கலம், மற் ஹென்றி, ரொம் லதாம் ஆகியோருக்குப் பதிலாக மில்னே, வில்லியம்ஸன், எல்லியட் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு, திமுத் கருணாரட்ண 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை 113 வரை உயர்த்தினர். டில்ஷான் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, குமார் சங்கக்காரவுடன் ஜோடி சேர்ந்த மஹேல ஜெயவர்த்தன அற்புதமாக விளையாடினார். 76 ஓட்டங்களைப் பெற்றவேளை சங்கக்கார ஆட்டமிழந்தார். 

மஹேல தொடர்ந்தும் சிறப்பாக விளையாடி 82 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்று, சதத்தினைத் தவறவிட்டு அன்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்வரிசை விக்கெட்டுக்கள் வேகமாக வீழ்த்தப்பட, இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

பந்துவீச்சில் ரிம் சௌதி 3 விக்கெட்டுகளையும், மில்னே, மக்லெஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 48.1 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூஸிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்ஸன் 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். குரே அன்டர்ஸன் 47 ஓட்டங்களின் ரன்அவுட்டானார். 

போட்டியின் நாயகனாக கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார். குறித்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2 இற்று 1 என நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .