2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அரபு எமிரேட்ஸை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து

George   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 16ஆவது போட்டியில் அயர்லாந்து அணி, 2 விக்கெட்டுக்களால்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை தோற்கடித்துள்ளது.

பிரிஸ்பேனில் இன்று புதன்கிழமை(25) ஆரம்பமான 16ஆவது போட்டியில் அயர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.  

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 50 ஒவரில், 9 விக்கெட்டுகளைஇழந்து 278 ஓட்டங்களை பெற்றது.  

279 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய அயர்லாந்து அணி, 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .