2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: டோனி

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என இந்திய அணியின் ஒரு நாள் சர்வதேச அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். 

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரை விளையாடுவது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை எனக் கூறியுள்ள டோனி, 2016ஆம் ஆண்டு உலக டுவென்டி-20 தொடரின் பின்னரே அந்த முடிவைப் பற்றி யோசிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். 

எனக்கு 33 வயதுதான் பூர்த்தியடைந்துள்ளது. நல்ல முறையில் ஓடக் கூடிய நிலையில் உள்ளேன். பூரண உடற் தகுதியுடன் இருக்கின்றேன். இந்நிலையில் ஏன் ஓய்வைப் பற்றி சிந்திக்க வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்மையில் அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் போட்டிகளில் டோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த உலகக் கிண்ணத்துடன் டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (26) உலக கிண்ணத் தொடரில் அரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், அவுஸ்திரேலியா அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, டோனி ஓய்வு பெறுவது பற்றி நீங்கள் கேட்டதை நானும் கேட்டேன். டோனி இப்போதைக்கு ஓய்வு பெறக்கூடாது. அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு பின்னால் இன்னமும் நிறைய கிரிக்கெட் இருக்கின்றது. அவர் கிரிக்கெட்டுக்குத் தேவையான ஒருவர் எனக் கூறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .