2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு இலக்கு 184 ஓட்டங்கள்

George   / 2015 மார்ச் 29 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக்கிண்ண போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆரம்பமானது.

இந்த இறுதிப்போட்டியில்  நியூசிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

45 ஒவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, சகல விக்கெட்டுக்களையும் இழந்து  183 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து சார்பில் ஜீ.டி.எலியட் 81 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் ஓரு 6 ஓட்டம் அடங்கலாக 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, உலக கிண்ணத்தை வெற்றி கொள்ள அவுஸ்திரேலியாவுக்கு இலக்காக  184 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இலகுவான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி, அவுஸ்திரேலிய அணி களமிறங்குகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .