Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் இருந்த கிரேக் கீஸ்வெட்டர் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கவுன்டி போட்டியில், நோர்தாம்ப்டன் ஷையர் அணியுடன் சாமர்செட் அணி மோதியது.
இந்த போட்டியில் சாமர்செட் அணிக்காக விளையாடிய கீஸ்வெட்டரின் முகத்தில் பந்து தாக்கியது. இதில் மூக்கு மற்றும் கண்ணுக்கு கீழே உள்ள எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக தற்போது அவருடைய இடது கண்ணில் பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்தே 27 வயதான கீஸ்வெட்டர் ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார்.
இது தொடர்பாக கீஸ்வெட்டர் கூறுகையில்,
'அதிரடி துடுப்பாட்ட வீராக இனிமேல் விளையாட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை த்ரில்லான ஒரு வாழ்க்கையாக அமைந்தது. ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்தில் ஓய்வு பெறுவது குறித்து எந்த வருத்தமும் எனக்கு இல்லை' என்றார்.
இங்கிலாந்து அணிக்காக கீஸ்வெட்டர் 46 ஒருநாள் போட்டிகளிலும், 25 டுவென்டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பங்காளதேஷில் நடந்த டுவெண்டி20 உலகக்கிண்ணத்தின் தொடர் நாயகனாக கீஸ்வெட்டர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கீஸ்வெட்டர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago