A.P.Mathan / 2015 ஜூன் 11 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொடர்களில் கடந்த இரண்டு வருடங்களாக பிரகாசித்து வரும் ஜெகன் முபாரக் 8 வருடங்களின் பின்னர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் 254 ஓட்டங்களை மாத்திரமே இவர் பெற்றுள்ளார். அதிகூடிய ஓட்டங்களாக 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் தரிந்து கௌஷால், குஷால் பெரேரா ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் துஸ்மாந்த சமீரவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்
அஞ்சலோ மத்தியூஸ், லஹிறு திரிமான்னே, கௌஷால் சில்வா, திமுத் கருணாரத்ன, குமார் சங்ககார, தினேஷ் சந்திமால், கித்ருவான் விதானகே, ஜெஹான் முபாரக், குஷால் பெரேரா, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, தரிந்து கௌஷால், நுவான் பிரதீப், தம்மிக்க பிரசாத், துஸ்மாந்த சமீர, சுரங்க லக்மால்(உபாதையில் இருந்து குணமடைந்தால் அணியில் இணைக்கப்படுவார்)
கபில விஜயதுங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு செய்துள்ளது. இந்த புதிய தெரிவுக்குழு மிகப் பெரிய மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. எதிர்பார்க்கப்பட்ட அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்தன மற்றும் உப்புல் தரங்க அணியில் சேர்க்கப்படாத கவனிக்கத்தக்க முக்கிய வீரர்கள் ஆவர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago