2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய விருதுகள்

A.P.Mathan   / 2015 ஜூன் 11 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 2013-14 கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான கிரிக்கெட் பருவகாலத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் படி சுலைமான் பென் சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ளார். 

விருது விவரங்கள் 

சிறந்த வீரர்
சுலைமான் பென் 
5 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்களை 25.03 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 

சிறந்த டெஸ்ட் வீரர்
க்ரேக் ப்ரத்வைட் 
5 டெஸ்ட் போட்டிகளில் 593 ஓட்டங்கள். சராசரி 74.12. ஒரு இரட்டைச்சதம் மற்றும் ஒரு சதம் 

சிறந்த ஒருநாள் போட்டி வீரர் 
டினேஷ் ராம்டீன் 
11 போட்டிகளில் 445 ஓட்டங்கள். 63.57 சராசரி. 2 சத்தங்கள் மற்றும் ஒரு அரைச்சதம் 

சிறந்த அறிமுக வீரர் 
ஜெராமைன் ப்லக்வூட்
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்களைப்  அதேவேளை ஒரு சதம் மற்றும் அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். 

சிறந்த வீராங்கனை 
ஸ்டபனி ரெய்லர் 

சிறந்த 20-20 வீரர்
சாமுவேல் பத்ரி 
12 போட்டிகளில் 19 விக்கெட்கள். சராசரி 12.36 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .