A.P.Mathan / 2015 ஜூன் 15 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக ரவி சாஸ்த்திரி, அடுத்த 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்து அணியுடனான தொடரின் இடை நடுவே ரவி சாஸ்த்திரிக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் தொடருக்கு தற்காலிகமாக பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரின் பதவி தொடருமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வந்த வேளையில் இவரின் பதவி தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
சிம்பாவே தொடரில் இருந்து குறித்த பதவியை நிரந்தமாக ரவி சாஸ்த்திரி பெற்றுக்கொள்ளவுள்ளார். இவரின் கீழ் மூன்று உதவிப் பயிற்றுவிப்பாளர்கள் கடமையாற்றுவார்கள். அணியின் சகல முகாமைத்துவ பணிகளையும் ரவி சாஸ்த்திரி பொறுப்பாக இருந்து கவனிக்க வேண்டும். விரைவில் அவருக்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாகக் குழு தினசரி செயற்பாடுகளில் தலையிடக்கூடாது என்ற உறுதியைப் பெற்ற பின்னரே ரவி சாஸ்த்திரி இந்த பதவிக்கான சம்மதத்தை தெரிவித்தாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இந்திய ஊடக செய்தி ஒன்றின் படி ரவி சாஸ்த்திரிக்கு கோடி இந்திய ரூபா ஒரு வருட சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago