A.P.Mathan / 2015 ஜூன் 15 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் விக்கெட் காப்பாளர் மத் ப்ரையர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது அவரின் கணுக்காலில் உபாதை ஏற்பட்டது. அப்போது சத்திர சிகிச்சை செய்வதற்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அவர் விலகிக்கொண்டார். அவரின் உபாதை முழுமையாக குணமடையாத நிலையில் தொடர்ந்து போட்டிகளில் விளையாடமுடியாத நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
உபாதையில் இருந்து குணமடைந்தால் மீண்டும் விளையாடும் நம்பிகையுடன் இருந்தேன். ஆனால் இரண்டு படி முன்னேறினால், நான்கு படி பின்னேற்றம் ஏற்படுகின்றது. எனவே ஓய்வை அறிவிக்கின்றேன். இந்த நாள் ஒரு கவலையான நாள் என மத் ப்ரையர் தெரிவித்துள்ளார்.
79 டெஸ்ட் போட்டிகளில் 4,099 ஓட்டங்களை 40.18 என்ற சராசரியில் 7 சதங்கள், 28 அரைச்சதங்கள் அடங்கலாக பெற்றுள்ளார். 243 பிடிகளை எடுத்துள்ள அதேவேளை 13 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.
68 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1,282 ஓட்டங்களை 24.18 என்ற சராசரியில் 3 அரைச்சதங்கள் அடங்கலாக பெற்றுள்ளார். 71 பிடிகளை எடுத்துள்ள அதேவேளை 08 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago