2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

அன்டேர்சனுக்கு ராணியின் கௌரவம்

A.P.Mathan   / 2015 ஜூன் 15 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன், இங்கிலாந்து மகாராணியின் கௌரவத்தை அவரின் பிறந்த நாள் அன்று பெற்றுக்கொள்ளவுள்ளார். 

அண்மையின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இங்கிலாந்து அணி சார்பாக கூடுதலான டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைக் கைப்பற்றிக்கொண்டார். அண்மையில் நியூசிலாந்து தொடரில் 400 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்க்கல்லை தாண்டினார். இங்கிலாந்து அணி சார்பாக 400 விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற முதலாவது வீரர் ஆக இவர் மாறியுள்ளார். இங்கிலாந்தில் சாதனை படைத்தவர்களை மகாராணியின் பிறந்த நாள் அன்று கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் அன்டர்சன் இந்த கௌரவத்தைப் பெறவுள்ளார். 

2002ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட அன்டர்சன் 2003ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். 104 டெஸ்ட் போட்டிகளில் 403 விக்கெட்களை 29.42 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .