A.P.Mathan / 2015 ஜூன் 15 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. கொழும்பு, கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அஹமட் செஷாட் 82 ஓட்டங்களையும், யூனிஸ் கான் 64 ஒட்டங்களையும் பெற்றனர். ஜெப்ரி வன்டர்சி 5 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் அணி 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் கௌஷால் சில்வா 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். சுல்பிகார் பாபர் 6 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஜெப்ரி வன்டர்சி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டது. 264 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் உப்புல் தரங்க 50 ஓட்டங்களையும், திமுத் கருனாரட்ன 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago