George / 2015 ஜூன் 17 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றால், செல்சி அணி மூன்று வருடங்கள் இன்னொரு மைதானத்தில் விளையாட வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 41,798 இரசிகர்களை உள்ளடக்கக்கூடிய ஸ்டம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தை, 60,000 இரசிகர்கள் பார்வையிடக்கூடிய மைதானமாக விரிவுபடுத்தவும், மைதானத்தில் பாரிய திருத்த வேலைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள இந்த புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றால், செல்சி அணி டுவிக்கெனம் அல்லது விம்பி மைதானங்களில் தங்களது போட்டிகளில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மைதானத்தில் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பான திட்டங்கள் ஆரம்பநிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் செல்சி, அவை நிஜமாவதற்கு இன்னும் வருடங்கள் செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கிறது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago