George / 2015 ஜூன் 17 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிஷாம் அபேயில் நடந்த இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலியா 6 : 1 என்ற கோல் கணக்கில் பெரிய பிரித்தானியாவை வீழ்த்தியது. அவுஸ்திரேலியா சார்பாக கிறிஸ் சிரியல்லோ இரண்டு கோல்களைப் பெற்றதோடு, சைமோன் ஒச்சார்ட், பிளேக் கவர்ஸ், ஜெமி டுவையர், அரன் சலவ்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெரிய பிரித்தானியா பெற்ற ஒரு கோலினை கிறிஸ் கிறிபித்ஸ் பெற்றிருந்தார்.
முதலாவது போட்டியில் பெரிய பிரித்தானியா 3 : 1 என்ற ரீதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவத போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதையடுத்து, இத்தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
வரும் சனிக்கிழமை பெல்ஜியத்தில் இடம்பெறவுள்ள உலக லீக் அரையிறுதிப்போட்டி ஆரம்பத்துக்கு, பெரிய பிரித்தானியா பயணமாகிறது. மேற்படி போட்டி ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதி பெறும் போட்டியாகவும் காணப்படுகிறது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago