2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

நொக் அவுட்டுக்குள் நுழைந்தது கனடா

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில், போட்டிகளை நடாத்தும் நாடான கனடா, குழு நிலைச் சுற்றுக்களைத் தாண்டி, நொக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நெதர்லாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் சமநிலையான முடிவு பெறப்பட்ட போதிலும், அவ்வணி நொக் அவுட் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆறு குழுக்களாக இடம்பெறும் இப்போட்டிகளில், குழு நிலையில் முதலிரு இடங்களைப் பெறும் 12 அணிகளும் ஒட்டுமொத்தமான போட்டிகளில் சிறப்பான நான்கு அணிகளுமாக, 16 அணிகள் நொக் அவுட் சுற்றுக்களுக்குத் தகுதிபெறும். 

இதன்படி, குழு 'ஏ' அணிகளுக்கான முக்கியமான போட்டியில் கனடா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற, போட்டி சமநிலையில் முடிந்தது.

கனடா, சீனா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ய போதிலும், புள்ளிகளின் அடிப்படையில் கனடா முதலிடத்தைப் பெற்றது. இக்குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்ற சீனாவும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், மூன்றாமிடத்தைப் பெற்ற நெதர்லாந்து ஏனைய அணிகளின் பெறுபேறுகளில் தங்கியுள்ளது.

குழு 'பி' இல் ஜேர்மனி, நோர்வே ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், ஏனைய பெறுபேறுகளின் அடிப்படையில் தாய்லாந்து அணி தகுதிபெற வாய்ப்புக்கள் உண்டு.

குழு 'சி' இல் ஜப்பான் தகுதிபெற்றுள்ள போதிலும், சுவிற்சர்லாந்து, கமரூன், ஈக்குவடோர் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளன.

குழு 'டி' இல் அமெரிக்கா முன்னிலை வகிக்கின்ற போதிலும், அவுஸ்திரேலியா, சுவீடன், நைஜீரியா ஆகிய மூன்று அணிகளோடு, அமெரிக்காவும் இதுவரை  இன்னமும் உறுதியாகத் தெரிவாகவில்லை.

குழு 'ஈ' இல் பிரேசில் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஏனைய அணிகளான கொஸ்டா றிக்கா, ஸ்பெய்ன், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும்  இன்னமும் தகுதிபெறவில்லை.

குழு 'எஃப்' இல் கொலம்பியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மெக்ஸிக்கோ என நான்கு நாடுகளும் இன்னமும் தகுதிபெறவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .