2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

நொவக் ஜோக்கோவிச்சை தோற்கடிக்கத் தயாராகும் அன்டி மரே

A.P.Mathan   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நொவக் ஜோக்கோவிச்சுக்கு எதிராக தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்துவரும் அன்டி மரே, அந்தத் தோல்விகளிலிருந்து மீள்வதற்குத் தயாராகுவதாகத் தெரிவித்துள்ளார். குயீன்ஸ் கிண்ணத்தை வெற்றிகொண்ட பின்னரே, அவர் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதியன்று விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே, அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ள அன்டி மரே, 41 போட்டிகளில் ஆறு போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அந்த ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகள், முதல்நிலை வீரர் நொவக் ஜோக்கோவிச்சுக்கு எதிராகப் பெறப்பட்டவையாகும்.

ஜோக்கோவிச்சுக்கு எதிராகத் தோல்வியடைந்தமை கவலையானது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஜோக்கோவிச் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஆகவே அவரிடம் தோல்வியடைவதில் அவமானமேதும் கிடையாது எனவும் தெரிவித்ததோடு, ஆனால் பெரிய தொடர்களை வெல்வதற்கு, ஜோக்கோவிச்சை வெல்ல வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அவரைத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்த மரே, அப்போட்டிகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, முன்னேறிக் கொண்டிருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .