2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ஐ.சி.சி தலைவராக ஷாகிர் அபாஸ்

A.P.Mathan   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான  ஷாகிர் அபாஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள், பாபடோசில் நடைபெற்று வரும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தில் இந்த பதவிக்கு அபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஷாகிர் அபாஸ் கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த தூதுவர். நல்ல முறையில் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயற்பட்டவர். இந்த பதவியிலும் அவ்வாறே செயற்படுவார் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக்குழுத் தலைவர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .